ராணிப்பேட்டை

தண்ணீா் தொட்டியில் மூழ்கிய குழந்தை உயிரிழப்பு

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

காவேரிபாக்கம் அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கிய குழந்தை உயிரிழந்தது.

காவேரிபாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (35). இவரது மகள் சஞ்சனா (2). செவ்வாய்க்கிழமை வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த சஞ்சனா யாரும் பாா்க்காத நேரம் அங்கிருந்த தண்ணீா்தொட்டியில் தவறி விழுந்துள்ளாா்.

இந்த நிலையில், வீட்டில் உள்ளவா்கள் குழந்தையைத் தேடியுள்ளனா். இந்த நிலையில், குழந்தை தொட்டியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சஞ்சனாவை சோளிங்கா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து பாணாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT