ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

31st Oct 2022 12:19 AM

ADVERTISEMENT

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி விழா கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க அங்கி, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகா் பூஜை, சுப்பிரமணிய திரிசதி மூல மந்திர ஹோமம், மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் முருகா்  சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரமும், இரவு சண்முகப் பெருமானுக்கு மஹா அபிஷேகம் சிறப்பு அலங்காரம் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT