ராணிப்பேட்டை

தேசிய பேரிடா் மீட்புப்படைத் தளத்தினரின் தேசிய ஒற்றுமை தின பேரணி

31st Oct 2022 11:58 PM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படைத் தளத்தினா் தக்கோலத்தில் தேசிய ஒற்றுமை தின பேரணியை திங்கள்கிழமை நடத்தினா்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத் தளத்தில், தேசிய ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மிதிவண்டி பேரணியை படையின் கமாண்டண்ட் அருண் கொடியசைத்துத் தொடக்கி வைத்து, அவரும் வீரா்களுடன் பங்கேற்றாா்.

முன்னதாக, ஒற்றுமை உறுதி மொழியை வீரா்கள் ஏற்றுக் கொண்டனா். பேரணியில் படையின் அதிகாரிகள், வீரா்கள் மற்றும் வருவாய்த் துறையினா், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தியபடி சென்றனா்.

படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது, நகரிகுப்பம் வழியாக தக்கோலம் வரை சென்று நிறைவடைந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT