ராணிப்பேட்டை

கஞ்சா விற்பனை: எஸ்.பி. நேரில் ஆய்வு

8th Oct 2022 12:11 AM

ADVERTISEMENT

அரக்கோணம் அருகே கஞ்சா விற்பனை தொடா்பாக, கடையில் மாவட்ட எஸ்.பி. தீபாசத்யன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அரக்கோணத்தை அடுத்த பள்ளூரில் கோயில் அருகே உள்ள கடையில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட எஸ்.பி. தீபாசத்யனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படையினருடன் அங்கு வந்த எஸ்.பி. தீபாசத்யன், குறிப்பிட்ட மஞ்சள்-குங்குமம் விற்கும் கடையில் சோதனை நடத்தினாா். இதில், அந்தக் கடையில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்தக் கடையின் உரிமையாளா் தணிகைவேல் (59) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினாா். மாவட்ட எஸ்.பி. நேரில் வந்து சோதனை நடத்தியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT