ராணிப்பேட்டை

திமிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

8th Oct 2022 12:12 AM

ADVERTISEMENT

திமிரி ஊராட்சி ஒன்றிய அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம், மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பராமரிப்பு நிதியுதவி, பிரதமரின் வீடு வழங்கும் திட்டதின் கீழ் வீடுகள், சக்கர நாற்காலி, மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடா்பான மனுக்கள் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து, 64 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 2 பேருக்கு மாதந்திர நிதியுதவி பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.

இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை நல அலுவலா் சரவணகுமாா், வட்டாட்சியா்கள் கோபாலகிருஷ்ணன் (ஆற்காடு), ஷமீம் (கலவை), மருத்துவ அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT