ராணிப்பேட்டை

கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

நெமிலி அருகே கிணற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பாணாவரத்தை அடுத்த அரசங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரபாண்டியன்(42), கட்டடத் தொழிலாளி. இவா், நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில் உள்ள விவசாய கிணறுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது தவறி விழுந்த வீரபாண்டியன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது குறித்து பாணாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT