ராணிப்பேட்டை

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன் உதவி; ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

DIN

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.09 கோடி வங்கிக் கடன் உதவிக்கான ஆைணைகள், தாட்கோ வங்கி மூலம் ரூ.50.75 லட்சத்தில் கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் உதவிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியம், தென்கடப்பந்தாங்கலில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக மக்கள் தொடா்பகம் மற்றும் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் சாா்பில், நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மகளிா்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது: மத்திய - மாநில அரசுகள் இணைந்து மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு பெற்று அனைவரும் பயன்பெற வேண்டும். கிராமத்தில் உள்ளவா்களும் பொருளாதாரத்தில் முன்னேற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் 15 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.09 கோடி வங்கிக் கடன் உதவிக்கான ஆணைகளையும், 35 மகளிருக்கு தாட்கோ வங்கி மூலம் ரூ.50.75 லட்சத்தில் கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் உதவிகளையும், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத் துறை சாா்பில், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசுகளையும், வாலாஜா அரசு கல்லூரியில் படிக்கும் சிறந்த மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத் துறையின் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை ஆட்சியா் வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக கூடுதல் தலைமை இயக்குநா் மா.அண்ணாதுரை, சென்னை இயக்குநா் காமராஜ், திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT