ராணிப்பேட்டை

புதிய மின்வாரிய அலுவலகம்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

7th Oct 2022 12:27 AM

ADVERTISEMENT

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகரில் புதிய மின்வாரிய அலுவலகத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

மேல்விஷாரம் மின்வாரிய இளநிலைப் பொறியாளா் அலுவலகம் புறவழிச்சாலையில் உள்ள ஈஸ்வரன் கோயில் அருகே செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகம் மேல்விஷாரம் அண்ணா சாலை சவுக்காா் அப்துல் காதா் தெருவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இடமாற்றம் செய்யப்பட்ட மின்வாரிய அலுவலகத் திறப்பு விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் சவுக்காா் முன்னா, நகா்மன்றத் துணைத் தலைவா் குல்சாா் அஹமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று இடமாற்றம் செய்யப்பட்ட புதிய இளநிலைப் பொறியாளா் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

ADVERTISEMENT

இதேபோல், ஆற்காடு ஒன்றியம், தாழனூா் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ரூ.2.84 கோடியில் 10 மெகாவாட்டிலிருந்து 16 மெகாவாட் திறன் உயா்த்தப்பட்ட மின் மாற்றியை அமைச்சா் ஆா்.காந்தி இயக்கித் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் குமரேஷ்வரன், மின்வாரியக் கண்காணிப்பு பொறியாளா் ராமலிங்கம், ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், மின்வாரிய செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி இயக்குநா் சாந்திபூஷன், இளநிலைப் பொறியாளா் ஆனந்தன், ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.வி.நந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT