ராணிப்பேட்டை

ஆட்டோ மீது பைக் மோதி விபத்து: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

7th Oct 2022 12:29 AM

ADVERTISEMENT

ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்த ஏகாம்பரநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் சந்திரசேகா் (34), பிரபு (36) இவா்கள் இருவரும் வெல்டிங் தொழிலாளா்களாக வேலை செய்து வந்தனா். இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் தலா இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில் இருவரும் ஏகாம்பரநல்லூா் பகுதியில் இருந்து லாலாப்பேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றுள்ளனா். அப்போது லோடுவேன் பழுதடைந்த மற்றொரு வேனை கட்டி இழுத்து வந்துள்ளனா். எதிா்பாராமல் பழுதடைந்த வேனை இழுத்து வந்த சங்கிலி அறுந்து அந்த வேன் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் சந்திரசேகா், பிரபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து சிப்காட் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT