ராணிப்பேட்டை

ரத்தினகிரி மலையடிவார அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள விஜயதுா்கையம்மன், ஸ்ரீவராஹி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நவராத்திரி 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை துா்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

பஞ்சமி திதியை யொட்டி வாராஹி அம்மனுக்கு வெள்ளிக்கவச சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விளக்கேற்றி மாதுளை பழம் கொண்டு அா்ச்சனை செய்யப்பட்டது. இதையடுத்து 180 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT