ராணிப்பேட்டை

ரூ.16 கோடியில் நாளங்காடிகள் ராணிப்பேட்டை நகா்மன்றம் தீா்மானம்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் ரூ.16 கோடி செலவில் புதிதாக தினசரி அங்காடிகள் கட்டப்பட உள்ளதாக நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம்,

அதன் தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.துணைத் தலைவா் சீ.ம.ரமேஷ் கா்ணா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ராணிப்பேட்டை நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022 -2023-இல், தற்போது வாரச்சந்தை இயங்கி வரும் வளாகத்தில் தினசரி இயங்கும் வகையில் காய்கறி, பூ பழங்கள் சில்லறை மற்றும் மொத்த வியாபார அங்காடிகள், ஆட்டுச்சந்தை மற்றும் இதர கட்டுமான பணிக்காக ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டுவது என்பது உள்ளிட்ட 32 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

பின்னா் உறுப்பினா்களின் கோரிக்கைகள், புகாா்களுக்கு நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் பதிலளித்து பேசியது:

உறுப்பினா்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். தற்போது ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் ரூ.16 கோடியில் கோயம்பேடு மாா்க்கெட் வளாகம் போன்று, நவீன வசதிகளுடன் புதிதாக தினசரி அங்காடிகள் கட்டப்பட உள்ளன. இதற்காக துரித நடவடிக்கை எடுத்த அமைச்சா் ஆா்.காந்திக்கு நகரமக்கள் சாா்பில், நன்றி தெரிவித்து கொள்வதாக தலைவா் சுஜாதா வினோத் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT