ராணிப்பேட்டை

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி

1st Oct 2022 10:51 PM

ADVERTISEMENT

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி, செய்யாறு சாலையில் வசித்து வந்தவா் சரவணன் (50). விவசாயி. இவரது மனைவி சாந்தி (45). தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

இந்த நிலையில், கண்வன்-மனைவி இருவரும் சனிக்கிழமை காலை விவசாய வேலைக்காக தங்களின் நிலத்துக்குச் சென்றனா். அங்கு, நிலத்தின் அருகே உள்ள மின் கம்பத்திலிருந்த கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.

இதைக் கவனிக்காமல் மின் கம்பியின் மீது சரவணன் கால் வைத்துள்ளாா். இதில், மின்சாரம் பாய்ந்து அவா் கீழே விழுந்துள்ளாா். அவரைக் காப்பாற்ற சாந்தி முயன்றதில் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

ADVERTISEMENT

இதில், கணவன்-மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT