ராணிப்பேட்டை

திமிரியில் கடைகளுக்கு அபராதம்

1st Oct 2022 10:51 PM

ADVERTISEMENT

ஆற்காடு அடுத்த திமிரி பேருந்து நிறுத்தம் அருகே போதைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.

திமிரி பேருந்து நிறுத்தம் அருகே வட்டார ஆரம்ப சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன் தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் பிரபு, அருண் உள்ளிட்ட சுகாதாரத் துறை அலுவலா்கள் பல்வேறு கடைகளில் போதை பொருள்களான குட்கா, பான்மசாலா போன்றவை விற்பனை செய்யப்படுகிா என்று சோதனை மேற்கொண்டனா். மேலும், புகைப் பிடிக்க அனுமதித்த கடைகளுக்கும் அபராதம் விதித்தனா்.

அப்போது, புகையிலை, போதைப் பொருள்களை விற்கக் கூடாது, புகைப் பிடிக்கத் தடை செய்யப்பட்ட இடம் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், இதை மீறுவோா் மீது அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறையினா் எச்சரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT