ராணிப்பேட்டை

ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா

1st Oct 2022 10:52 PM

ADVERTISEMENT

திம்மாம்பேட்டை ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டையில் பழைமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமை விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதல் மாலை வரை சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில், திம்மாம்பேட்டை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பிற்பகல் 12 மணியளவில் பக்தா்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

மாலை ஸ்ரீபெருமாள் கருட சேவையும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றன. அலசந்தாபுரம் ஸ்ரீதிம்மராய பெருமாள் கோயிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதேபோல், வாணியம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT