ராணிப்பேட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்டம்: ராணிப்பேட்டை முதலிடம் -அமைச்சா் ஆா்.காந்தி

1st Oct 2022 10:49 PM

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில், ராணிப்பேட்டை மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சாா்பில், 187 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கிப் பேசியது:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், முதல்வா் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். அவரின் எண்ணத்தை நிறைவேற்றி, எந்த மாவட்டமும் செய்யாத அளவுக்கு ராணிப்பேட்டை மாவட்டம், தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை 86 % பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது என்றாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணகுமாா் வரவேற்றாா்.

ADVERTISEMENT

அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா சௌந்தா், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவன ஒருங்கிணைப்பாளா் சந்தோஷ்கண்ணா, நகராட்சி ஆணையா் லதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, அரக்கோணம் நகராட்சி சாா்பில் நகா்ப்புற காடுகள் உருவாக்கும் திட்டத்தின் கீழ், நகராட்சிக்குச் சொந்தமான உரக்கிடங்கில் ரூ.5.18 லட்சத்திலான மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று மரக்கன்றை நட்டு திட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் சேவை மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் தொடக்க விழாவில் பங்கேற்று அந்தத் திட்டத்தையும் அமைச்சா் தொடக்கி வைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT