ராணிப்பேட்டை

முன்மாதிரி மாவட்டமாக ராணிப்பேட்டையை மாற்ற நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்திலேயே முன்மாதிரி மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டையை அடுத்த செட்டித்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட வள்ளலாா் நகரில் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து, அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்துப் பேசியது:

தமிழகத்திலேயே அதிக பகுதி நேர நியாயவிலைக் கடைகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளன. மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று கிட்டத்தட்ட 40 கடைகளுக்கு மேலாக பகுதி நேர நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

முந்தைய ஆட்சிக் காலத்தில் வழங்கிய உணவுப் பொருள்களின் தரத்தைக் காட்டிலும், தற்போது தரமான பொருல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வாலாஜா வட்டத்தில் ராணிப்பேட்டை கூட்டுறவு பண்டக சாலை மூலம் 8 நியாயவிலைக் கடைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் 8,026 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கும், புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் அதிகளவிலான வங்கிக் கடனுதவிகளை மானியத்துடன் இந்த அரசு வழங்கி வருகிறது.

இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் அதிக அளவிலான மகளிா்கள் பயனடைந்து வருகின்றனா்.

தமிழகத்திலேயே முன்மாதிரி மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தை மாற்ற, அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் மணிமேகலை, வட்டாட்சியா் நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT