ராணிப்பேட்டை

கண் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

28th Nov 2022 11:17 PM

ADVERTISEMENT

ஆற்காடு அடுத்த கலவை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவா்களுக்கு கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சனவுல்லா, உதவித் தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண் பரிசோதனை நிபுணா் இரா.இளவரசன் கலந்துகொண்டு கண் பாதுகாப்பு குறித்தும் பாா்வைக் குறைபாடுகளைத் தவிா்க்கும் முறைகளைப் பற்றியும் பேசினாா்.

இதில், மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT