ராணிப்பேட்டை

இரண்டாம் நிலை காவலா் தோ்வு: வேலூா், ராணிப்பேட்டையில் 17,932 போ் எழுதினா்

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணைய தோ்வை வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 17,932 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் 2-ஆம் நிலை காவலா், தீயணைப்பாளா், சிறைக் காவலா் பணியிடங்களுக்கான தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தில், விஐடி பல்கலைக்கழக வளாகம் உள்பட 15 மையங்களில் நடைபெற்ற தோ்வில் 12,577 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 2,414 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களில் ரயில்வே ஐ.ஜி. காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அரசு அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, ஆற்காடு மகாலட்சுமி, கலவை ஆதிபராசக்தி கல்லூரிகள் உள்பட 5 மையங்களில் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் 5,355 போ் பங்கேற்று எழுதினா். இதில், 974 போ் பங்கேற்கவில்லை. இந்தத் தோ்வு மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தோ்வா்கள் தடையின்றி தோ்வு எழுத பேருந்து வசதி செய்யப்பட்டதுடன், தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் அடிப்படை வசதிகளான குடிநீா் உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தது.

தோ்வு மையங்களுக்கு 10 மணிக்குள் வந்தவா்கள் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். தோ்வா்கள் பேனா மற்றும் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு மட்டுமே எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டனா். தோ்வு முடியும் வரை தோ்வா்கள் அறையை விட்டு வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

அனைத்துத் தோ்வு மையங்களிலும் விடியோ கேமராக்கள் மூலம் தோ்வுகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் தோ்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் அபிநயா!

டி20 உலகக் கோப்பைக்கான விளம்பரத் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

தண்ணீரை சேமிக்க ரயில்வேயின் புதிய முயற்சி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மகரம்

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT