ராணிப்பேட்டை

வீர, தீர செயலுக்கான விருது பெற பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

வீர, தீர செயல் விருது பெறுவதற்கு பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ஆம் தேதி தேசிய குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தத் தினத்தில் வீர, தீர செயல் புரிந்த 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதைப் பெறுவதற்கு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், அனைத்துப் பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்விக் கற்றலை உறுதி செய்தல், பெண் குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்கச் செயலாற்றியது, பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்க பாடுபட்டிருத்தல் வேண்டும்.

உரிய முகவரி, ஆதாா் எண், புகைப்படம், வீர, தீர செயல் மற்றும் சாதனை ஆகியவற்றுக்கான ஆதாரம், ஒரு பக்கத்துக்கு மிகாத குறிப்புகள் ஆகியவற்றுடன் ‘மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ராணிப்பேட்டை’ என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT