ராணிப்பேட்டை

இலவச மருத்துவ முகாம்

27th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கலவை வட்டம், மேலப்பழந்தை கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ரேவதி தலைமை வகித்தாா். திமிரி ஒன்றியக் குழுத் தலைவா் அசோக் முன்னிலை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் குத்து விளக்கேற்றி வைத்து முகாமைத் தொடக்கி வைத்தாா்.

இதில், தாய் சேய் நலம் தடுப்பூசி வழங்குதல், காய்ச்சல் நோய் பரிசோதனை, கல் மற்றும் தொண்டை பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் வழங்கப்பட்டன.

முகாமில், 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.இதில் மருத்தவா்கள் இளையராஜா, அபா்னா, சுகாதார ஆய்வாளா் பிரபு, உட்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT