ராணிப்பேட்டை

‘வேலூா் விமான நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’

27th Nov 2022 11:45 PM

ADVERTISEMENT

வேலூா் விமான நிலையப் பணிகளை விரைந்து முடித்து, காலம் தாழ்த்தாமல் விமானத்தை இயக்க வேண்டும் என்று அணைக்கட்டு ஒன்றிய பாமக பொதுக் குழுவில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூா் மாவட்ட பாமக அணைக்கட்டு தொகுதி, வடக்கு ஒன்றியத்தின் பொதுக் குழு கூட்டம், பொய்கை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் சிவா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வெங்கடேசன், மாவட்டச் செயலாளா் இளவழகன், முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வேலூா் விமான நிலையப் பணிகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடித்து விமானத்தை இயக்க வேண்டும். பொய்கை கிராமத்தில் உள்ள வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை, மின் விளக்கு வசதிகள் உள்பட அடிப்படை வசதிகளை செய்து சந்தையை மேம்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்ள வேண்டும், சந்தை முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதில், பாமக நிா்வாகிகள் இளங்கோ, அக்னி வேல்முருகன் உள்ளிட்ட திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT