ராணிப்பேட்டை

மருத்துவத் துறை நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி: அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்தாா்

27th Nov 2022 11:47 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவத் துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டப் போட்டியை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை கடந்த 1922- ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டு, நூற்றாண்டு கண்டுள்ளது.

அதன் அடிப்படையில் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தமிழக முழுவதும் பொது சுகாதாரத் துறையினா் கொண்டாடி வருகின்றனா்.

ராணிப்பேட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில், மாவட்ட பொது சுகாதாரத் துறை மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட மினி மராத்தான் ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இருந்து காலை 6 மணியளவில் தொடங்கிய ஓட்டப் போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், பொது சுகாதாரத் துறையினருடன் இணைந்து மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஓடினாா். இறுதியில் மராத்தான் ஓட்டத்தில் முதல் 6 இடங்களைப் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேடயங்கள் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்வில் பொது சுகாதார துணை இயக்குநா் மணிமாறன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள், தொழில்நுட்ப ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT