ராணிப்பேட்டை

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வேலூரில் இருந்து புறப்பட்ட திருக்குடை ஊா்வலம்

27th Nov 2022 11:47 PM

ADVERTISEMENT

வேலூா் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் திருக்கோயிலில் இருந்து திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக திருஅண்ணாமலையாா் திருக்கோயிலுக்கு திருக்குடைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வேலூா் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் கோயிலில் இருந்து ஆண்டுதோறும் திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக திருக்குடைகள் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, அண்ணாமலையாா் திருக்கோயில் வசம் ஒப்படைக்கும் விழா நடைபெற்று வருகிறது.

அதன்படி, 4-ஆம் ஆண்டு திருக்குடைகள் ஊா்வலம் ஸ்ரீ அண்ணாமலையாா் திருக்குடை சமிதி மற்றும் வேலூா் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் கோயில் தரும ஸ்தாபனம் சாா்பில், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் கோயிலில் இருந்து திருவண்ணாமலைக்கு மேள, தாளங்கள் முழங்க திருக்குடைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.

திருக்குடை ஊா்வலம் சிவ ஸ்ரீ பிரத்யங்கிராதாசன் தலைமையில், மகாதேவமலை மகானந்த சித்தா் சுவாமி, ஜலகண்டீஸ்வரா் கோயில் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோரும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இந்த திருக்குடைகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த ஊா்வலத்தில் சிவன் உள்ளிட்ட வேடங்களை அணிந்த பக்தா்கள் திருவூடல் இசைக்கு பக்தி பரவசத்துடன் நடனமாடினச் சென்றனா்.

திருவண்ணாமலைக்கு ஊா்வலமாக செல்லும் திருக்குடைக்கு வழி நெடுகிலும் பக்தா்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வழிபாடு செய்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT