ராணிப்பேட்டை

கஞ்சா கடத்திய இருவா் கைது

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தில் இருந்து அரக்கோணத்துக்கு பைக்கில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த போலீஸாா், அவா்கள் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் சாலமன்ராஜா தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை திருத்தணி -அரக்கோணம் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ஆந்திரத்தில் இருந்து திருத்தணி வழியாக அரக்கோணம் நோக்கி வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த பைக்கில் வந்த ஆந்திர மாநிலம், புத்தூரை அடுத்த ஓ.ஜி.குப்பத்தைச் சோ்ந்த மகேந்திரன் (35), துா்காராவ் (38) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா்.

அவா்கள் இருவரும் எங்கிருந்து கஞ்சாவை எடுத்து வந்தனா், யாரிடம் கொடுக்க சென்றனா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT