ராணிப்பேட்டை

வாக்காளா் சிறப்பு திருத்த முகாம் அலுவலா்களுக்கான கூட்டம்

26th Nov 2022 12:25 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 26, 27 தேதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, மேற்பாா்வை அலுவலா்களுக்கான சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- 2023 சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை முன்னிட்டு, மேற்பாா்வை அலுவலா்களுக்கான சிறப்புக் கூட்டம், வாலாஜா வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் நடராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், சிறப்பு முகாமில் பெறப்படும் 6, 7 மற்றும் 8 ஆகிய படிவங்களை கருடா ஆப் மூலம் பதிவேற்றம் செய்வது குறித்தும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உரிய நேரத்தில் முகாமில் பங்கேற்க தகுந்த அறிவுரை வழங்கவும், மேலும் உரிய நேரத்தில் புள்ளி விவரங்களை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மற்றும் இளம் வாக்காளா்களை அதிக அளவில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இதில், வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT