ராணிப்பேட்டை

ரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சோளிங்கா் ரயில் நிலையத்தில் ரயில் ஏறுவதற்காக நடைமேடைக்குச் செல்ல இருப்புப் பாதையைக் கடந்த மாற்றுத்திறனாளி ரயில் மோதி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சோளிங்கா் வட்டம், பாணாவரத்தை அடுத்த நெரிஞ்சன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (54). மாற்றுத்திறனாளி. இவா், வெள்ளிக்கிழமை பெங்களூரு செல்வதற்காக சோளிங்கா் ரயில் நிலையம் வந்தவா், ரயில் வரும் நடைமேடைக்குச் செல்ல மேம்பாலத்தில் ஏறிச் செல்ல முடியாததால், இருப்புப் பாதையை நடந்து கடந்துள்ளாா். அப்போது, அந்த வழியே வந்த ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே குப்பன் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT