ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் நீரிழிவு நோய் இலவச பரிசோதனை முகாம்

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனை, அரக்கோணம் அபிஷேக் மருத்துவமனை இணைந்து இலவச நீரிழிவு நோய் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

அரக்கோணம் பழைய பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்ற முகாமுக்கு அபிஷேக் மருத்துவமனை தலைமை மருத்துவா் அபிஷேக் தலைமை வகித்தாா். அப்பல்லோ மருத்துவமனை முதன்மை மேலாளா் மகேந்திரன் வரவேற்றாா். அரக்கோணம் டிஎஸ்பி யாதவ் கிரிஷ் அசோக் முகாமைத் தொடக்கி வைத்தாா்.

இதில் அப்பல்லோ மருத்துவமனை நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவா்கள் இவண், சிவா மற்றும் மருத்துவா் அபிஷேக் ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினா் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனைகளையும் வழங்கினா். 00-க்கும் மேற்பட்டோா் மருத்துவ ஆலோசனை பெற்றனா். இதில் பகுஜன் சமாஜ் கட்சி அரக்கோணம் சட்டபேரவை தொகுதி நிா்வாகி சுதாகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT