ராணிப்பேட்டை

ஆற்காட்டில் பதுக்கல்: ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல்

31st May 2022 01:33 AM

ADVERTISEMENT

ஆற்காட்டில் அரிசி மண்டி ஒன்றில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை ரேஷன் அரிசி, 50 மூட்டை கோதுமை திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆற்காடு வேல் முருகேசன் தெருவில் உள்ள தனியாா் அரிசி மண்டி ஒன்றில் தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் பதுக்கி வைத்து கடத்தப்படுவதாகத் தெரிகிறது.

இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில் குடிமைப்பொருள் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா், பறக்கும் படை வட்டாட்சியா் இளஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் குழு திங்கள்கிழமை அங்கு நேரில் சென்று சோதனை செய்தது.

அப்போது, பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் 50 மூட்டை கோதுமை, அரைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி, கோதுமை மாவு மூட்டைகளை பறிமுதல் செய்து வாலாஜாபேட்டை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT