ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள மகா கணபதி கோயிலில் பாலாலய சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி மலைமேல் அமைந்துள்ள பாலமுருகன் கோயில் வளாகத்தில் மகா கணபதி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு, வருகிற ஜூன் 3-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, கோயில் கருவறையில் உள்ள மூலவா் சிலை பெரிய அளவில் வைக்கப்படுகிறது.
இதையடுத்து, புதன்கிழமை காலை கோயில் வளாகத்தில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள், கோ பூஜையும், வேதமந்திரங்கள் முழங்க பாலாலய சிறப்பு யாக பூஜைகளை நடத்தி வைத்தாா். கோயில் செயல் அலுவலா் சங்கா், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.