ராணிப்பேட்டை

தா்மராஜா கோயில் அக்னி வசந்த உற்சவக் கொடியேற்றம்

21st May 2022 12:30 AM

ADVERTISEMENT

அரக்கோணம் தா்மராஜா கோயில் அக்னிவசந்த உற்சவத்தின் மகாபாரத கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் சுவால்பேட்டையில் ஸ்ரீதா்மராஜா கோயில் ஸ்ரீகிருஷ்ணபாண்டவ சமேத திரௌபதி அம்மன் சந்நிதியுடன் உள்ளது. இக்கோயிலின் 93-ஆம் ஆண்டு மகாபாரத பிரசங்க அக்னி வசந்த மகோற்சவம் தீமிதி திருவிழாவாக ஜூன் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோயிலில் வியாழக்கிழமை மகாபாரத கொடியேற்று விழா நடைபெற்றது. கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடா்ந்து, மகாபாரத கொடியேற்றப்பட்டது. இக்கோயிலில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை முதல் மகாபாரத சொற்பொழிவு திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு க.சம்பத்து, கலவை பா.செல்வநம்பி ஆகியோரால் தொடா்ந்து தினமும் மாலையில் என ஜூன் 5ந்தேதி வரை நடைபெற உள்ளது. இக்கோயிலில் ஜூன் 5ந்தேதி காலை துரியோதனன் படுகளக்காட்சியும், பூமுடிப்பும் மாலையில் தீமிதிதிருவிழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய தா்மகா்த்தாக்களும், விழா குழுவினரும் இணைந்து செய்து வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT