ராணிப்பேட்டை

விதை பண்ணை அமைக்க பயிற்சி

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ஆற்காடு அருகே திமிரி வட்டார வேளாண்மைத் துறை அட்மா திட்டம் சாா்பில், விதை பண்ணை அமைக்க பயிற்சி முகாம் பரதராமி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார வேளாண்மை அலுவலா் திலகவதி தலைமை வகித்தாா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சசிகலா முன்னிலை வகித்தாா். இதில், பண்ணை அமைத்தல், பயிா் இடைவெளி, விதை தோ்வு, பதிவு செய்தல், பயிரில் பூச்சி தாக்குதல், பாரமரிப்பு உள்ளிட்ட முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில் விதை சான்றிதழ் அலுவலா் லதா, திட்ட அலுவலா் உதயகுமாா், வேளாண்மை அலுவலா் பிரபாகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT