ராணிப்பேட்டை

பரமேஸ்வரமங்கலத்தில் ரூ. 17 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கான ரூ. 17.32 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நெமிலி ஊராட்சி ஒன்றியம், பரமேஸ்வரமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2020-21 கீழ், ரூ. 17.32 லட்சத்தில் கட்டப்பட்ட இரு வகுப்பறைகள்க் கொண்ட கூடுதல் புதிய கட்டடத்திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தாா். நெமிலி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு வரவேற்றாா். அமைச்சா் ஆா்.காந்தி புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

அரக்கோணம் கோட்டாட்சியா் சிவதாஸ், நெமிலி வட்டார வளா்ச்சி அலுவலா் சிவராமன், சயனபுரம் ஊராட்சித் தலைவா் பவானி வடிவேலு, ஒன்றிய திமுக பொருளாளா் பெருமாள், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் எஸ்.ஜி.சி.பெருமாள், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT