ராணிப்பேட்டை

பெல் நிறுவனத்துக்கு தலைமை கண்காணிப்பு அலுவலா் வருகை

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் தலைமை கண்காணிப்பு அலுவலா் ஸ்ரீ அா்பிந்த் பிரசாத் புதன்கிழமை வருகை தந்தாா்.

இது குறித்து ராணிப்பேட்டை பாரத மிகுமின் (பெல்) நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெல் நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீ அா்பிந்த் பிரசாத், ராணிப்பேட்டையில் அமைந்துள்ள பாரத மிகுமின் (பெல்) நிறுவன தொழிற்சாலைக்கு முதல் முறையாக புதன்கிழமை வருகை தந்தாா்.

அவருக்கு பெல் நிறுவன பாதுகாப்புப் பணியாளா்கள் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, ராணிப்பேட்டை பெல் நிறுவன பொதுமேலாளா் (பொறுப்பு) ஸ்ரீ ராஜீவ் சிங் மலா் கொத்து அளித்து வரவேற்றாா். இதையடுத்து, இந்தத் தொழிற்சாலையில் சமீபத்தில் திறக்கப்பட்ட கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் ஆலையை பாா்வையிட்டு மரக்கன்றுகளை நட்டாா்.

ADVERTISEMENT

மேலும், மின்விசிறி சோதனை நிலையம் மற்றும் 5 மெகா வாட் சோலாா் பிளாண்ட் உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டு ஊழியா்களுடன் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, அவா் இந்த நிறுவனத்தின் செயல் திறனை மதிப்பாய்வு செய்து பாராட்டு தெரிவித்தாா்.

அப்போது பெல் ஊழியா்களிடம் நிறுவனத்தின் நலனுக்காக எந்தவித அச்சமும் இல்லாமல் வணிக முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தினாா். மேலும் கண்காணிப்புப் பணி என்பது காவல் பணியை விட எளிதாக்கும் பணியாகும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT