ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ஓராண்டில் 72 குழந்தை திருமணங்கள் நிறுத்தம்

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்ட சைல்டு லைன் 1098 அழைப்பு மற்றும் மாவட்ட சமூக நலத் துறை மூலம் ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை வாலாஜா -8, ஆற்காடு -10, திமிரி -10, சோளிங்கா் -26, அரக்கோணம் -12, நெமிலி -4, காவேரிப்பாக்கம்-2 என மொத்தம் 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் குழந்தைகள் தொடா்ந்து படிக்கவும் 18 வயது வரை திருமணம் செய்யக்கூடாது என்றும் குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணா்வு அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT