ராணிப்பேட்டை

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி: கிராம மக்கள் புகாா்

2nd May 2022 11:54 PM

ADVERTISEMENT

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்தவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக் கோரி, மருதம்பாக்கம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கைகள் அடங்கிய 204 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்தில் ராணிப்பேட்டையை அடுத்த மருதம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:

மருதம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவா் ஏலச்சீட்டு நடத்தி சுமாா் 350-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.10 லட்சம் வரை தராமல் மோசடி செய்துவிட்டாா். அவரிடமிருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மை நல அலுவலா் சேகா், துணை ஆட்சியா்கள் தாரகேஷ்வரி, இளவரசி, துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT