ராணிப்பேட்டை

28இல் முன்னாள் படைவீரா்கள், படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

21st Mar 2022 11:04 PM

ADVERTISEMENT

வரும் 28-இல் முன்னாள் படை வீரா்கள், படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு...

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், படை வீரா் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் வரும் மாா்ச் 28-ஆம் தேதி மாலை 3 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படை வீரா்கள், அவா்தம் குடும்பத்தைச் சாா்ந்தோா் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் குறைகளைத் தெரிவித்து, பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT