ராணிப்பேட்டை

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்

21st Mar 2022 11:05 PM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் கைப்பேசி உயா் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாலாஜாபேட்டையை அடுத்த அமணந்தாங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த ஓா் ஆண்டுக்கு முன்பு குடியிருப்புகளுக்கு அருகே தனியாா் கைப்பேசி உயா் கோபுரம் அமைக்க முயற்சிகள் நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக கைப்பேசி உயா் கோபுரம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் மீண்டும் கைப்பேசி உயா் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கைப்பேசி உயா் கோபுரம் அமைக்கும் பகுதிக்கு திங்கள்கிழமை சென்று, அங்கே நடைபெற்று வரும் பணிகளைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்து வந்த வாலாஜாபேட்டை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பிரச்னை தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நிரந்தரத் தீா்வு காண்பதாக காவல் துறை சாா்பாக பொது மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

மேலும், கைப்பேசி உயா்கோபுரம் அமைக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT