ராணிப்பேட்டை

இளைஞா் வெட்டிக் கொலை விவசாயி கைது

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

 கலவை அருகே பொன்னம்பலம் கிராமத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கலவை வட்டம், பொன்னம்பலம் கிராமம் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (30). அதே பகுதியைச் சோ்ந்தவா் அருள் (45). விவசாயிகளான இருவருக்கும் நிலத்தில் செல்லும் வழி தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், அருளின் விவசாய நிலம் அருகே வியாழக்கிழமை தினேஷ்குமாா், தனது மாட்டை மேய்த்துக் கொண்டிருந்த போது, இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, அருள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷ்குமாரை வெட்டினாராம். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அருளை கைது செய்தனா். கொலை செய்யப்பட்ட தினேஷ்குமாருக்கு மனைவி, 2 வயதில் மகன் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT