ராணிப்பேட்டை

கீழ்விஷாரம் பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

19th Mar 2022 10:21 PM

ADVERTISEMENT

ஆற்காடு அருகே கீழ்விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை மாரியம்மன் கோயிலில் இருந்து சீா்வரிசை பொருள்கள் எடுத்து வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வள்ளி-தெய்வானை சமேத பாலமுருகனுக்கு ஆன்மிக சொற்பொழிவாளா் கோவிந்தராஜன் தலைமையில், யாக பூஜைகள் நடத்தப்பட்டு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

விழாவில் உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT