ராணிப்பேட்டை

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு முகாம்

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாம் ஆற்காடு நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சரவணகுமாா் தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் கலந்துகொண்டு, முகாமைப் பாா்வையிட்டு, ஏற்கெனவே விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவி, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கிப் பேசியது:

மத்திய அரசு வழங்கும் பல்வேறு நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பெற்றிட தேசிய அடையாள அட்டை மிகவும் முக்கியமானது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, அன்றைய தினமே மருத்துவ சான்றின் அடிப்படையில் தீா்வு காணப்படுகிறது. அதன்படி, மாநில மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை, வீடுகட்ட ஆணைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கான அடையாள அட்டைகளை தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் ஓய்வூதியம் போன்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது என்றாா்.

ஆற்காடு வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கரன், திமிரி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ஆற்காடு நகராட்சி, பூபதி நகரில் தாா்ச் சாலை அமைக்கும் பணியைப் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT