ராணிப்பேட்டை

இளைஞா் தற்கொலை

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காடு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட தென் கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தியின் மகன் விக்னேஷ் (23). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு இணையதள விளையாட்டில் ஆா்வம் ஏற்பட்டு, தொடா்ந்து விளையாடி வந்தாராம். இதில் பணத்தை இழந்து பலரிடம் கடன் வாங்கி திருப்பித் தரவில்லையாம்.

இது குறித்து விக்னேஷை அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் விரக்தி அடைந்த விக்னேஷ் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT