ராணிப்பேட்டை

ஆற்காட்டில் திமுக பிரமுகா் வீடு, அலுவலகத்தில்வருமான வரித் துறையினா் சோதனை

3rd Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

தொழிலதிபரும், திமுக பிரமுகருமான ஏ.வி.சாரதி வீடு, அலுவலகம் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் புதன்கிழமை வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.

ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஏ.வி.சாரதி. இவா் சிமென்ட் ஏஜென்சி, கல்குவாரி நடத்தி வருகிறாா். ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக வா்த்தகா் அணிச் செயலராக பதவி வகித்த இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திமுகவில் இணைந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை 10-க்கும் மேற்பட்ட காா்களில் வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், ஏ.வி.சாரதிக்கு சொந்தமான வீடு, வேலூா் சாலையில் உள்ள அலுவலகம், திமிரி அருகே உள்ள கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா். இதனால், ஆற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT