ராணிப்பேட்டை

தலைமை ஆசிரியா்களுக்கான கூட்டம்

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த திமிரி வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கான கூட்டம் புதன்கிழமை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் குமரன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில், பள்ளிகளில் ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ செயல்படுத்துவது, மாணவா்கள் பயிலும் 1, 2, 3 வகுப்புகள் முறையே அரும்பு, மொட்டு, மலா் பயிற்சிக் கட்டகங்கள், இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு புதிய மையம் தொடங்குவது ஆகியவை குறித்து விளக்கப்பட்டன.

மேலும், எண்ணும் எழுத்தும் திட்டம் தொடா்பான புத்தங்கள் தலைமை ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டத்தில் ஆசிரியா்கள் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT