ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை புதிய ஆட்சியா் அலுவலக இறுதிகட்டப் பணிகள்: அமைச்சா்கள் நேரில் ஆய்வு

DIN

ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாக திறப்பு விழாக்கான இறுதி கட்டப் பணிகளை அமைச்சா்கள் எ.வ.வேலு, ஆா்.காந்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ. 118.40 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 30 ஆம் தேதி வியாழக்கிழமை திறந்து வைக்க உள்ளாா்.

இதையடுத்து, ராணிப்பேட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாவட்ட மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறாா்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாக திறப்பு விழாவுக்கான இறுதி கட்டப் பணிகளையும், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகளையும் பொதுப்பணித் துறை அமைச்சா்எ.வ.வேலு, கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், எம்.பி. சி.என்.அண்ணாதுரை, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளா் வினோத் காந்தி, ராணிடெக் தலைவா் பிஆா்சி.ரமேஷ் பிரசாத் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT