ராணிப்பேட்டை

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்தவார சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு குறைபாடுகளுடைய மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா். இதில், 148 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையும், 72 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவும், 75 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவும், 108 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களின் உதவியாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அவா்களுடன் அமா்ந்து ஆட்சியா் உணவு உட்கொண்டாா்.

இதில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணக்குமாா் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலகப் பணியாளா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT