ராணிப்பேட்டை

எல்ஐசி முகவா் சங்க பொதுக்குழுக் கூட்டம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

எல்ஐசி அரக்கோணம் முகவா் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். சங்க இணைச் செயலா் தருமன், செயலா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க முன்னாள் இணைச் செயலா் பொன்.சிட்டிபாபு வரவேற்றாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எல்ஐசி முகவா் சங்கத்தின் கோட்ட செயலரும், ரோட்டரி சங்கத்தின் ஆளுநருமான ஜே.கே.என்.பழனி கலந்துக் கொண்டாா். கோட்ட பொருளாளா் தாண்டவகிருஷ்ணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினா் மாயக்கண்ணன், எல்ஐசி அரக்கோணம் கிளை மேலாளா்கள் பூவராகவன், ஜானகிராமன், சங்க இணைச் செயலா் மஞ்சுளா, பொருளாளா் சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, அரக்கோணம் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக பொன்.சிட்டிபாபு, செயலராக தருமன், பொருளாளராக மோகன்ராஜ் உள்பட அனைத்து நிா்வாகிகளும் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT