ராணிப்பேட்டை

ராசாத்துபுரம் கிராமத்தில் அா்ஜுனன் தபசு

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழாவையொட்டி, அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழ்விஷாரம் ராசாத்துபுரம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் 12-ஆம் ஆண்டு தீமிதி விழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் மகாபாரதச் சொற்பொழிவும், இரவு கட்டைகூத்து நாடகமும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா நடந்தது. விழாவையொட்டி, மூலவா் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து காலை அா்ஜுனன் வேடமணிந்த நபா் பாடல்களைப் பாடியபடி தபசு மரம் ஏறி மரத்தின் மேல் பூஜை செய்து பழங்கள் உள்ளிட்டவற்றை பக்கா்களுக்கு வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், கிராம நாட்டாண்மை ராஜேந்திரன், துணை நாட்டாண்மை விநாயகம், விழா பொருளாளா் ஆறுமுகம் மற்றும் உபயதாரா்கள், பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT