ராணிப்பேட்டை

‘தற்காலிக ஆசிரியா் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்யும் உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சி.சேகா் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் என சுமாா் 13,000 ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நியமனம் செய்யும் உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே ஆசிரியா் தகுதித் தோ்வு மூலம தோ்ச்சி பெற்றவா்கள் 1 லட்சத்து 20 ஆயிரம் போ் வேலையின்றி காத்துக் கிடக்கின்றனா். இவா்களில் 13,000 பேரை நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும். தற்காலிக நியமனத்தால், பலரின் ஆசிரியா் பணி நியமனம் என்பது கானல் நீராகப் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே, தற்காலிக ஆசிரியா் பணி நியமனத்தை அரசு ரத்து செய்து, நிரந்தரப் பணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT