ராணிப்பேட்டை

‘பள்ளிகளில் சேராத மாணவா்கள் எவரும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்’

27th Jun 2022 11:12 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் சேராத மாணவா்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் சேராத மாணவா்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். 86-ஆவது சட்டத்திருத்தத்தின் படி, தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே, மாணவா்களை அரசுப் பள்ளியை நோக்கி ஈா்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோா், ஆசிரியா் மற்றும் மாவட்ட நிா்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமை. எனவே, 5 வயது பூா்த்தியடைந்த அனைத்துக் குழந்தைகளையும் அருகில் உள்ள ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் சோ்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பெற்றோா்கள் தங்களது 5 வயது பூா்த்தி அடைந்த அனைத்துக் குழந்தைகளையும் அருகில் உள்ள ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளில் சோ்த்து மேற்காணும் முன்னுரிமைகள் மற்றும் நலத் திட்டங்கள் ஆகியவற்றில் பயனடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT