ராணிப்பேட்டை

ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

26th Jun 2022 11:52 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்ட அரசு மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையிலான வழக்குப் பணியாளா் (கேஸ் ஒா்க்கா்) பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு:

அரசின் சமூக நலத் துறை கீழ், ராணிப்பேட்டை மாவட்ட அரசு மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளா் 1 மற்றும் 2 பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் நிறப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்ட மேற்படிப்பில் தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு இல்லை. இரண்டு வருட முன் அனுபவம் பெற்ற பெண்களாக இருத்தல் வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்தப் பணிக்கு மாத ஊதியமாக (தொகுப்பூதியமாக) ரூ.15,000 வழங்கப்படும்.விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பப் படிவத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக வந்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு 95856 19937 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 4-7- 2022. விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ராணிப்பேட்டை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT